TNGTF PERAVURANI
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
Monday, 5 January 2015
Monday, 22 September 2014
மங்கள்யான் புதிய சாதனை செவ்வாயை நெருங்குகிறது
செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்: விண்வௌியில் இந்தியா புதிய சாதனை!!! |
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம், தனது நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வௌிக்குள் நுழைந்துள்ளது.
இந்த விண்கலம், நாளை மறுநாள் செவ்வாயின் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இன்று நடந்த டெஸ்ட்பயர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் விண்வௌி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஏவியது. கடினமான, நீண்ட பயணத்திற்கு பின்னர், மங்கள்யான் தற்போது செவ்வாயின் மிக நெருக்கத்தை எட்டி உள்ளது. மங்கள்யான் விண்கலத்தை, ஒரு பெரிய ராக்கெட்டும், எட்டு உந்துவிசை சிறிய மோட்டார்களும் உள்ளன. இந்த மோட்டார்கள் தற்போது செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மங்கள்யான் செவ்வாயை நெருங்கி உள்ள நிலையில், அந்த கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும். அதற்காக இந்த மோட்டார்களை இயக்க வேண்டும். அந்த பணியில் பெங்களூரு கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உந்துவிசை மோட்டார்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை கண்டறிய, நான்கு நொடிகளுக்கு மட்டும் அவை இயக்கப்பட்டன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக வெற்றிகரமாக விண்கலத்தை ஏவிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'ராக்கெட் மோட்டார்களை இயக்க 4 நொடி டெஸ்ட் பயர் செய்யப்படும். இதன் மூலம், மங்கள்யான் தனது பாதையில் இருந்து கீழ்நோக்கி வரும். சரியான பாதையில் மங்கள்யானை நிலை நிறுத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்,' என்றார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி
Breaking News: ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி!!! |
ஆசிரியர் தகுதித்தேர்வில்
வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது.
Saturday, 20 September 2014
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை |
கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை.
இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ASST.PROFESSOR : PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
ASST.PROFESSOR : PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW |
பிளஸ்2 கணித பாட கேள்விகளால் குழப்பம்
பிளஸ்2 கணித தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால்
மாணவர்கள் திண்டாடினர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 வகுப்பிற்கு காலாண்டுத் தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கியது. நேற்று காலை பிளஸ்2 கணிதம் தேர்வு நடந்தது. காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கியதும் மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. வினாத்தாள்களை வாசித்துப் பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, காலாண்டுத் தேர்வுக்கு பிளஸ்2 வகுப்பில் கணிதத்தில் முதல் பாடத்தில் இருந்து 5 பாடங்கள் வரை சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் காலாண்டுத் தேர்வு பாடத்திட்டத்தில் இல்லாத 6வது பாடமான நுண் கணிதம் & பயன்பாடுகள் இரண்டு என்ற பாடத்தில் இருந்து 10 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 6 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 4 மதிப்பெண் கேள்விகள் ஒன்று என 36 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன.
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் திணறினர். மாணவ, மாணவிகளின் அறிவுத் திறன், புரிதல் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக தான் மாதம் தோறும் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் பாடத் திட்டம் அல்லாத பகுதிகளில் இருந்து கேள்வி எழுப்பினால் மாணவர்களை எப்படி மீளாய்வு செய்ய முடியும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தினர் கூறுகையில், இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் மத்தியில் வீண் குழப்பம் உருவாகும். நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மதிப்பெண் குறையும். தேர்வுக்கான வினாக்கள் தயாரிக்கும் போது தேர்வுத்துறை கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
Friday, 19 September 2014
TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?
TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?
TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?
COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I.
The learned Advocates are informed that the matters once passed over would be called again before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. --------------------------------------------------------------------------------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~
1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/2014 - DO -WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY (Service) S.SUREKHA IN Permit the petitioner MP.4/2014 - DO -AND WA.1038/2014 AND For Stay MP.1/2014 - DO -AND For Injunction MP.2/2014 - DO -AND For Direction MP.3/2014 - DO -AND WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014 (W.A.) S.SUREKHA ----------------R1. AND R2 SERVED ON 27/07/201 R1. THE STATE OF TAMIL NADU REP BY THE PRINCIPAL SECRETARY TO GOVT.SCHOOL EDUCATION DEPT. C
The learned Advocates are informed that the matters once passed over would be called again before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. --------------------------------------------------------------------------------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~
1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/2014 - DO -WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY (Service) S.SUREKHA IN Permit the petitioner MP.4/2014 - DO -AND WA.1038/2014 AND For Stay MP.1/2014 - DO -AND For Injunction MP.2/2014 - DO -AND For Direction MP.3/2014 - DO -AND WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014 (W.A.) S.SUREKHA ----------------R1. AND R2 SERVED ON 27/07/201 R1. THE STATE OF TAMIL NADU REP BY THE PRINCIPAL SECRETARY TO GOVT.SCHOOL EDUCATION DEPT. C
Thursday, 18 September 2014
PG PANEL
முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க TNGTF தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று TNGTF தொடுத்துள்ள வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற பட்டியலில் வரிசை எண் 74 ல் இடம் பெற்றுள்ளது.
எனவே இன்று பிற்பகல் நேரத்தில் விசாரணைக்கு வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதாக என்ற எதிர்பார்ப்பதாக நமது மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்
எனவே இன்று பிற்பகல் நேரத்தில் விசாரணைக்கு வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதாக என்ற எதிர்பார்ப்பதாக நமது மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)


.jpg)